நெல்லை கண்டிபேரி பகுதியில் வயல் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள், அங்கு கிடந்த வாழைப்பழத்தை தின்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும், மேலும் ஒரு மாடு உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.வாழைப்பழத்தில் விஷம் கலக்கப்பட்டிருந்திருக்கலாம் என மாடுகளின் உரிமையாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வயல்வெளியில் மாடுகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் மற்றும் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெல்லை டவுண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடுகள் எவ்வாறு உயிரிழந்தன, வாழைப்பழத்தில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உயிருக்கு போராடி வரும் மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செய்திகள்
கண்டிபேரி பகுதியில் வயல்வெளியில் இரண்டு மாடுகள் உயிர் இழப்பு காரணம் குறித்து போலீசார் விசாரணை
🕒 14 செப்., 2026, 05:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நெல்லை டவுன் பகுதியில் உள்ள கண்டிபேரி பகுதியில் வயல்வெளியில் இரண்டு மாடுகள் உயிர் இழப்பு காரணம் குறித்து போலீசார் விசாரணை
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
